பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் பருப்பு ரூ.50 லட்சத்துக்கு ஏலம்

Added : ஜன 14, 2020
Advertisement

மொடக்குறிச்சி: எழுமாத்தூரில், தேங்காய் பருப்பு, 50 லட்சம் ரூபாய்க்கு விலை போனது. விலை சிறிது கூடியதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம், நேற்று நடந்தது. மொத்தம், 1,326, மூட்டைகளில், 60 ஆயிரத்து, 578 கிலோ வரத்தானது. முதல் தரம் குவிண்டால் அதிகபட்சம், 10 ஆயிரத்து, 530 ரூபாய், குறைந்தபட்சம், 9,800 ரூபாய்க்கு ஏலம் போனது. இரண்டாம் தரம் அதிகபட்சம், 9,435 ரூபாய், குறைந்தபட்சம், 4,495 ரூபாய்க்கு விலை போனது. மொத்தம், 50 லட்சத்து, 26 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கடந்த வார ஏலத்தை ஒப்பிடுகையில், குவிண்டாலுக்கு, 135 ரூபாய் விலை கூடியதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X