சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கிராமத்திற்குள் புகுந்த யானையால் அச்சம்

Added : ஜன 14, 2020
Advertisement

சத்தியமங்கலம்: தாளவாடி அடுத்த, கோடிபுரம் கிராமத்தில், கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானையால் கிராமமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், தாளவாடி அடுத்த தலமலை வனச்சரகத்தில் கோடிபுரம் கிராமம் உள்ளது. இங்கு, 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. வனப்பகுதியை ஒட்டி, விருபாக்சா என்பவரின் கரும்பு தோட்டம் உள்ளது. நேற்று முன்தினம் காலை, இவரது கரும்பு தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை யானை, பயிர்களை சேதம் செய்தது. அதோடு, கிராமத்திற்குள் புகுந்து வீடுகளின் அருகே இருந்த, சோளத்தட்டுகளையும் தின்று சுற்றி திரிந்தது. இது குறித்து, மக்கள் தலமலை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி, யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். கிராமத்திற்குள் புகுந்த யானை மீண்டும் வரும் என்பதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X