சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திம்பம் மலைப்பாதையில் லாரி மோதி சிறுத்தை பலி

Added : ஜன 14, 2020
Advertisement

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அடுத்த, திம்பம் மலைப்பாதையில் லாரி மோதி, ஐந்து வயது ஆண் சிறுத்தை உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்து, 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. இந்த பகுதி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது என்பதால் சிறுத்தை, புலி, கரடி, மான், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. இந்த மலைப்பாதை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கர்நாடகா மாநிலம் செல்கின்றன. இங்கு வனவிலங்குகள் அடிக்கடி உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று காலை திம்பம் மலைப்பாதையின், 11 வது கொண்டை ஊசி வளைவில், சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதுகுறித்து, வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர், இறந்த சிறுத்தையை மீட்டு வன கால்நடை மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில், லாரி மோதி சிறுத்தை உயிரிழந்தது தெரியவந்ததது. இறந்த ஆண் சிறுத்தைக்கு ஐந்து வயது இருக்கும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X