பொது செய்தி

தமிழ்நாடு

குடியரசு தினவிழா ஆலோசனை கூட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

கரூர்: குடியரசு தினவிழா, முன்னேற்பாடு பணி குறித்த ஆலோசனை கூட்டம், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அன்பழகன் பேசியதாவது: மாவட்ட விளையாட்டு மைதானத்தை நல்ல முறையில் பராமரிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். தீத்தடுப்பு வாகனம் மற்றும் சுகாதாரத்துறையின் அவசர ஊர்தியை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து அரசுத்துறைகளும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக பயனாளிகளை தேர்வு செய்தல், நல்லமுறையில் பணியாற்றிய அலுவலர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டுச்சான்றிதழ் வழங்குவதற்கான பெயர் பட்டியலை உரிய காலத்திற்குள் ஒப்படைக்கவேண்டும். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள மாணவ, மாணவியர் குறித்த தகவல்களை முதன்மைக்கல்வி அலுவலர் வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X