பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் திட்டப் பணிக்கு ரூ.11.20 லட்சம் வழங்கல்

Added : ஜன 14, 2020
Advertisement

கரூர்: தான்தோன்றிமலை ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., அமராவதி ஆறு முதல் மகாத்மா காந்தி நகர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி வரை தன்னிறைவு திட்டத்தின் கீழ், 33.60 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடிநீர் குழாய் அமைக்கப்படவுள்ளது. தன்னிறைவு திட்டம் என்பது, ஒரு திட்டத்திற்காக செலவினத்தில் மூன்றில் ஒரு பகுதியை பொதுமக்கள் வழங்கும்பட்சத்தில், மீதமுள்ள தொகையினை அரசு வழங்கி அத்திட்டத்தை நிறைவேற்றும். அதனடிப்படையில், அமராவதி ஆறு முதல், மகாத்மா காந்தி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி வரை குடிநீர் குழாய் அமைக்க ஆகும் செலவு, 33.60 லட்சம். அதில், மக்கள் சார்பாக, 11.20 லட்சம் ரூபாயை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதாவிடம், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்., தலைவர் சாந்தி வழங்கினார். திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் காளியப்பன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X