பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்ட டேபிள் டென்னிஸ்: 46 வீரர்கள் பங்கேற்பு

Added : ஜன 14, 2020
Advertisement

ஓசூர்: ஓசூரில் நடந்த, மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், 46 பேர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், கார்னேசன் டென்னிஸ் கிளப்பில், மாவட்ட டேபிள் டென்னிஸ் சார்பில் போட்டிகள் நடந்தன. 12, 15, 17, 19 மற்றும், 19 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. 46 வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர். அசோசியேஷன் தலைவர் ராமசாமி போட்டியை துவக்கி வைத்தார். ஒவ்வொரு பிரிவிலிருந்து, நான்கு வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் வரும், 18, 19ல், சேலத்தில் நடக்கும் மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க உள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு, ஓசூர் கார்னேசன் டென்னிஸ் கிளப் செயலாளர் திருப்பதிசாமி, சிஷ்யா பள்ளி தாளாளர் வசந்தி தியாகராஜன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். ஏற்பாடுகளை, டேபிள் டென்னிஸ் டெவலப்மென்ட் அசோசியேஷன் செயலாளர் ராஜ், பொருளாளர் லலித்சோனி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X