சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசார் பறிமுதல் செய்த ரூ.63 லட்சம் மதிப்பு குட்கா மாயம்

Added : ஜன 14, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட, 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை, உணவு பாதுகாப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார், வருவாய் துறையினர் பறிமுதல் செய்தால், அதை உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஒன்றரை மாதத்தில் கிருஷ்ணகிரியில், 48 லட்ச ரூபாய், சூளகிரியில், 15 லட்ச ரூபாய் என மொத்தம், 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, நான்கு பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்த குட்கா பொருட்களை விசாரணை முடிந்தும், உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் உரிய முறையில் ஒப்படைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை வட்டார அலுவலர்கள் கூறியதாவது: தடை செய்யப்பட்ட குட்கா பொருள், உணவு பொருட்கள் தான் என்பதை, நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. எனவே, இதை யார் பறிமுதல் செய்தாலும் விசாரணைக்கு பிறகு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், சமீபத்தில் போலீசார் பறிமுதல் செய்த, 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் குறித்து, எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இது குறித்து போலீசாரிடம் கேட்டால், அவர்கள் உரிய பதிலை கூறாமல் தட்டிக்கழிக்கின்றனர். இதனால், பிடிபட்ட குட்கா பொருட்கள் எங்குள்ளது என்பதை, நாங்களும் தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X