சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கொன்ற கணவருக்கு ஆயுள்

Added : ஜன 14, 2020
Advertisement

நாமக்கல்: நடத்தையில் சந்தேகமடைந்து, மனைவியை குத்தி கொலை செய்த கணவனுக்கு, நாமக்கல் மகிளா நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது.
நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த மணப்பள்ளியை சேர்ந்தவர் செல்லத்துரை, 35; கூலி தொழிலாளி. அவரது மனைவி மகேஸ்வரி, 23. தம்பதியருக்கு, இரு குழந்தைகள் உள்ளனர். மகேஸ்வரி நடத்தையில் சந்தேகமடைந்த செல்லத்துரை, அடிக்கடி தகராறு செய்து வந்தார். அதனால், மகேஸ்வரி கோபித்துக் கொண்டு, பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், 'சேர்ந்து வாழலாம்' எனக் கூறி, மகேஸ்வரியை, செல்லத்துரை அழைத்துள்ளார். அதை நம்பி, 2014 பிப்., 19 மாலை, 5:45 மணிக்கு, மோகனூர் அடுத்த வள்ளியம்மன் கோவில் அருகில் வந்தார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லத்துரை, கத்தியால் சரமாரியாக மகேஸ்வரியை குத்தினார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்தவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். மோகனூர் போலீசார் வழக்குப் பதிந்து, செல்லத்துரையை கைது செய்தனர். இவ்வழக்கு, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி சசிரேகா, நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், செல்லத்துரைக்கு, ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X