பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய அளவிலான மல்யுத்தம்: ஆட்டையாம்பட்டி மாணவர்கள் தேர்வு

Added : ஜன 14, 2020
Advertisement

வீரபாண்டி: மாநில அளவில், 17 வயதுக்குட்பட்டோர் மல்யுத்த போட்டியில் முதலிடம் பிடித்த ஆட்டையாம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் இருவர், தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் கவுரிசங்கர், பிளஸ் 1 மாணவன் கணேசன் இருவரும், மல்யுத்தம் கற்று வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாவட்ட, மாநில அளவில் நடக்கும் மல்யுத்த போட்டியில், முதல் மூன்று இடங்களுக்குள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த, 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் குமாரபாளையம் எஸ்.எஸ்.எம்., கல்லூரியில், தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் மாநில போட்டி நடந்தது. இதில், கவுரிசங்கர், கணேசன் ஆகியோர், 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர். மாநில அளவில் முதலிடம் பிடித்ததை தொடர்ந்து, அடுத்த மாதம் பீஹார் தலைநகர் பாட்னாவில் நடைபெறும், தேசிய மல்யுத்த போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மாணவர்களை, தலைமையாசிரியர் விஜயராகவன், உதவி தலைமையாசிரியர் நந்தீஸ்வரன், உடற்கல்வி இயக்குனர் முருகேசன், ஆசிரியர்கள் மணிகண்டன், முத்துகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுகுமார் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X