பொது செய்தி

தமிழ்நாடு

மாநில கபடி போட்டி: அழகாபுரம் அணி வெற்றி

Added : ஜன 14, 2020
Advertisement

சேலம்: பொங்கல் பண்டிகையையொட்டி, சேலத்தில் நடந்த மாநில கபடி போட்டியில், அழகாபுரம் அணி வெற்றி பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சேலம் அழகாபுரம் முருகன் கபடி குழுவினரின், 27ம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் கபடி போட்டி, கடந்த இரு நாட்களாக அழகாபுரத்தில் நடந்தது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 40 அணிகள் பங்கேற்றன. காலிறுதி, அரையிறுதி போட்டிக்கு பின், நேற்று அதிகாலை இறுதி போட்டி நடந்தது. பரபரப்பான போட்டியில், 26:23 என்ற புள்ளிக்கணக்கில், வருமானவரித்துறை அணியை, அழகாபுரம் முருகன் கபடி அணி வீழ்த்தியது. இதையடுத்து முதல் பரிசான, 50 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழற்கோப்பையை, முருகன் கபடி குழு பெற்றது. இரண்டாம் பரிசு, 30 ஆயிரம் ரூபாயை சென்னை வருமானவரித்துறை அணியும், மூன்றாம் பரிசு, 20 ஆயிரம் ரூபாயை சிங்கத்தமிழன் அணி, நான்காம் பரிசு, 10 ஆயிரம் ரூபாயை சாமி பிரதர்ஸ் அணிகள் பெற்றன. சிறந்த விளையாட்டு வீரராக, செல்வமணி தேர்வு செய்யப்பட்டார். பரிசளிப்பு விழாவில், போலீஸ் உதவி கமிஷனர் அனந்தகுமார், முன்னாள் மேயர் சுரேஷ்குமார், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X