பிப்., இறுதியில் இந்தியா வருகிறார் டிரம்ப் !| Dinamalar

பிப்., இறுதியில் இந்தியா வருகிறார் டிரம்ப் !

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (10)
Share
DonaldTrump, India, Trump, Presidenttrump, PMModi, Modi, NarendraModi,இந்தியா,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

இந்த செய்தியை கேட்க

வாஷிங்டன்: பிப்ரவரி மாத இறுதியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது வருகைக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை.

இருப்பினும், கடந்த 7 ம் தேதி டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை , அவர் ஏற்று கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், அதற்கு முன் இந்தியா வர டிரம்ப் ஆர்வமாக உள்ளார். இதற்கான பணிகளை இரு நாடுகளும் செய்து வருகின்றன. அமெரிக்க தூதர் ஹர்ஸ் சிறிங்களா, சில நாட்களுக்கு முன்னர் டிரம்ப்பை சந்தித்தார். அப்போது, டிரம்ப் பயணத்திற்கான, இந்திய தரப்பிலான நடவடிக்கைகளை அவர் துவக்கி வைத்தார்.


latest tamil news




வர்த்தக ஒப்பந்தம்


கடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியாவிற்கு வழங்கி வந்த ஜிஎஸ்பி வர்த்தக சலுகை(Generalized system of Preferences(GSP))யை அமெரிக்கா ரத்து செய்தது. டிரம்ப்பின், இந்திய பயணத்தின் போது இந்த சலுகை மீண்டும் வழங்கப்படும் என இந்திய அரசு எதிர்பார்க்கிறது. மேலும் அமெரிக்காவில் மேலும் முதலீடு, அங்கிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரிப்பது குறித்து இந்தியா அறிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X