பொது செய்தி

தமிழ்நாடு

புகையில்லா போகி கொண்டாட ஏற்பாடு

Added : ஜன 14, 2020
Advertisement

சேலம்: புகையில்லா போகி கொண்டாடும் வகையில், சேலம் மாநகராட்சியில், 100 இடங்களில் சிறப்பு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம் மாநகராட்சி மக்கள், தங்கள் வீடுகளில் பயன்படுத்திய பழைய பிளாஸ்டிக் மற்றும் கோரை பாய்கள், தலையணை, காலணி, டயர்கள் போன்ற உபயோகமற்ற பொருட்களை சேகரிக்க மாநகராட்சி சார்பில், 100 இடங்களில் சிறப்பு சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை முதல், மாலை வரை வீடுகளில் சேகரிக்கப்படும், பயன்படாத பொருட்களை வழங்கலாம். பயன்படாத பொருட்களை எரிக்கக் கூடாது. மீறுவோர் மீது உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். புகையில்லா போகி மற்றும் சுகாதார பொங்கல் கொண்டாட, ஒத்துழைப்பு வழங்க மக்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X