பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,000 பராமரிப்பு நிதி

Added : ஜன 14, 2020
Advertisement

சேலம்: சேலம், கலெக்டர் ராமன் வெளியிட்டுள்ள அறிக்கை: உடல் இயக்க குறைபாடு, மன வளர்ச்சி குறைபாடுள்ள அன்றாட நடவடிக்கைகளில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலாதவர்கள், தொடர் சிகிச்சை தேவைப்படுவோர், பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியின் குடும்ப உறுப்பினருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதற்கான தேர்வுக்குழு, மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்யும். அத்தகைய மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி சேமிப்பு புத்தக நகல் ஆகியவற்றுடன், மாற்றுத்திறனாளியின் பெற்றோர் வரும், 27 க்குள், மாற்றுத்திறனாளி நல அலுவருக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், கலெக்டர் அலுவலக அறை எண், 11ல் செயல்படும் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X