பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் கால்வாய் பாசன நீர் நாளை மாலை நிறுத்தம்

Added : ஜன 14, 2020
Advertisement

மேட்டூர்: மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன நீர், 155 நாட்களுக்கு பின்பு, நாளை மாலை நிறுத்தப்படுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாயில் ஆண்டுதோறும் ஆக.,1 முதல் டிச., 15 வரை, 137 நாட்கள் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம் சேலம் மாவட்டத்தில், 16 ஆயிரத்து, 443, ஈரோடு மாவட்டத்தில், 17 ஆயிரத்து, 230, நாமக்கல் மாவட்டத்தில், 11 ஆயிரத்து, 327 என மொத்தம், 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த ஆண்டு, 12 நாட்கள் தாமதமாக ஆக., 13ல் கால்வாயில் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. பாசன நீரை கடந்த மாதம், 27 ல் நிறுத்த வேண்டும். தாமதமாக பயிர் சாகுபடி துவங்கியதால், கால்வாய் நீர் திறப்பை நீட்டிக்க விவசாயிகள் வலியுறுத்தினர். அதை ஏற்று, ஜன., 15 வரை மேலும், 19 நாட்கள் கிழக்கு, மேற்கு கால்வாயில் நீர் திறப்பை நீட்டிக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி, பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்ட நிலையில், 155 நாட்களுக்கு பின்பு கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு திறக்கும் தண்ணீர், நாளை நிறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X