பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் ரூ.136 கோடி மோசடி: 100 நாள் வேலை திட்டத்தில் 'திடுக்'

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், கடந்த மூன்றாண்டுகளில், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், 136 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி நடந்துள்ளது என்ற திடுக் தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த, 10 ரூபாய் இயக்க பொதுச்செயலர் நல்வினை விஸ்வராஜ், சக நிர்வாகிகளுடன் வந்து, நேற்று சேலம் கலெக்டர் ராமனிடம் புகார் மனு அளித்தார்.

அதன்பின், அவர் அளித்த பேட்டி: சேலம் மாவட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், மூன்றாண்டுகளில், 136.13 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. அதாவது, 10 மரங்களை நட்டுவிட்டு, 1,000 மரங்களை நட்டதாக கணக்குக்காட்டி, அது, வறட்சி, கால்நடைகளால் அழிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதேபோல, சிறிய பண்ணைக்குட்டை கட்டிவிட்டு, பெரிய பண்ணைக்குட்டை கட்டியதாகவும், பழைய கழிப்பிடங்களை, புதிதாக கட்டியது, இறந்தவர் பெயரை பயன்படுத்தி பணம் எடுத்தல், குறைவான ஆட்களை வேலை வாங்கி, அதிக ஆட்கள் பெயரில் பணம் பட்டுவாடா என, பல்வேறு இனங்களில் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட சமூக தணிக்கை அறிக்கை, மத்திய அரசின் இணையதளத்தில் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், முறைகேடு உறுதிப்படுத்தப்பட்டும், இதுவரை நடவடிக்கை இல்லை. 100 நாள் வேலை திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளரான கலெக்டர், மாதந்தோறும் இது தொடர்பாக, ஆய்வு நடத்த வேண்டும். ஆனால், ஒரு ஆய்வுக்கூட்டம் கூட இதுவரை நடத்தவில்லை. அதிகபட்சம் தலைவாசல் ஒன்றியத்தில், 12 கோடி, அயோத்தியாப்பட்டணம், ஓமலூர் ஒன்றியத்தில் தலா, 9 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளனர். இதேபோல, 20 ஒன்றியங்களில், 136 கோடி ரூபாய்க்கு மோசடி நடந்துள்ளது. திட்டம் துவங்கிய, 2008ல், இருந்து கணக்கெடுத்தால், மோசடி தொகை மேலும் அதிகரிக்கும். தமிழகத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில், 347 கோடி ரூபாய், திருவள்ளூரில், 307 கோடி ரூபாய், கிருஷ்ணகிரியில், 293 கோடி ரூபாய், காஞ்சிபுரத்தில், 253 கோடி ரூபாய் என, 4,204 கோடி ரூபாய் மத்திய அரசு நிதியை, தமிழகத்தில் மோசடி செய்துள்ளனர். பொறுப்புடன், வெளிப்படை தன்மையுடன் செயல்படும் மத்திய அரசுக்கு, அவப்பெயர் உண்டாக்கும் வகையில், 100 நாள் வேலைதிட்டத்தை, மோசடியாக கையாண்டு வருகின்றனர். எனவே, மோசடி பணத்தை மீட்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-ஜன-202019:25:58 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan உண்மை. இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் ஏதும் செய்யாமல் சம்பளம் பெறுகின்றனர். சம்பளம் பெறுபவர்களிடம் ஒன்றிய ஊழியர்கள் பங்கு பெறுகிற்ர்கள். அந்த பணம் எடுக்க வரும் ஏழைகளிடம் வங்கி ஊழியர்கள் வித்யா ஸ்லிப் எழுத 10 ரூபாய் கமிஷன் அடிக்கின்றனர். இத்திட்டத்தை நிறுத்திவிடுவது நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X