இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, மைக்ரோசாட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யநாதெல்லா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சத்யநாதெல்லா கூறியதாக Bussfeed news நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் பென் ஸ்மத் டுவிட்டிரல் வெளியிட்ட பதிவில், '' என்ன நடக்கிறது என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இது மிக மோசமானது.
வங்கதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து இந்தியாவிற்கு வந்து பெரிய சாதனையாளராகவோ அல்லது இன்போசிஸ் போன்ற நிறுவனத்தின் அடுத்த தலைமை செயல் அதிகாரியாகவோ வர உள்ள ஒருவரை நான் காண விரும்புகிறேன்'' என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து மைக்ரோசாப்ட் இந்தியா சார்பாக நாதெல்லா அறிக்கையை வெளியிட்டுள்ளது.

டுவிட்டரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஒவ்வொரு நாடும் தனது எல்லையை வரையறுத்து, தேச நலன்களை பாதுகாக்க வேண்டும் அதற்கேற்றவாறு, குடியேற்ற கொள்கையை உறுதி செய்யும். ஜனநாயக நாட்டில், மக்களும், அரசாங்கங்களும் விவாதித்து, எல்லைகளை வரையறை செய்வார்கள். நான் எனது இந்திய பாரம்பரியத்தால், கட்டமைக்கப்பட்டுள்ளேன். பல கலாசாரங்கள் நிலவும் இந்தியாவில் வளர்ந்துள்ளேன்.
அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த அனுபவமும் எனக்கு உள்ளது. புலம்பெயர்ந்த ஒருவர், ஒரு வளமான தொடக்கத்தை கண்டுபிடிக்க வேண்டும். அல்லது இந்திய சமுதாயத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பெருமளவில் பங்களிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்த விரும்பும் இந்தியனாக இருப்பதே எனது நம்பிக்கை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Statement from Satya Nadella, CEO, Microsoft pic.twitter.com/lzsqAUHu3I
— Microsoft India (@MicrosoftIndia) January 13, 2020
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE