மறக்கமுடியாத மைலாப்பூர் திருவிழா

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020
Share
Advertisement



latest tamil news


சென்னையில் உள்ள மைலாப்பூர் மக்கள் ஒன்று இணைந்து கடந்த சில வருடங்களாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மைலாப்பூர் திருவிழாவினை கொண்டாடி வருகின்றனர்.


latest tamil news



இந்த வருடம் பலவித சிறப்புகளுடன் விழா களைகட்டியிருந்தது.
நான்கு நாள் விழாவில் கோலப்போட்டி நடைபெறும் கடைசி இரண்டு நாட்கள் நல்ல கூட்டம், கோலம் போடுபவர்களுக்கு இணையாக புகைப்படக்கலைஞர்கள் வந்திருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் அனுபவம் வாய்ந்த மூத்த புகைப்படக் கலைஞர்கள் என்பதால் அவர்களைப் பார்க்கவும் அவர்களிடம் பாடம் கேட்கவும் இளைய தலைமுறை புகைப்படக் கலைஞர்களும் வந்திருந்தனர்.


latest tamil news


கோலப்போட்டி நடக்கும் இடத்தில் ஒரு சுட்டிக் குழந்தை நானும் கோலம் போடுவேன் என்றபடி செய்த கோலக்குறும்புகள் புகைப்படக்கலைஞர்களுக்கு நல்ல விருந்து.


latest tamil news



பலுான் விற்பவர்கள் முதல் பாப்கார்ன் விற்பவர்கள் வரை அனைவரையும் பார்க்கமுடிந்தது இதில் அந்தக்காலத்தில் சவ்வு மிட்டாயில் கடிகாரம் மோதிரம் செய்து குழந்தைகளிடம் விற்பார்கள் அவர்களைக்கூட பார்க்கமுடிந்தது கயிறை இழுக்க இழுக்க மிட்டாய் பொம்மை கைதட்டி சப்தம் இழுத்தபடி வாடிக்கையாளர்களை அழைப்பது பலருக்கு வேடிக்கையாக இருந்தது.


latest tamil news


பாசிமணி மாலை விற்கும் நரிக்குறவர்கள் அதிகம் பேர் கடை போட்டிருந்தனர் இந்த மைலாப்பூர் திருவிழாவிற்கு இவர்கள் நிறைய நன்றிக்கடன் பட்டுள்ளனர் பெண்கள் வியாபாரத்தில் பிசியாக இருக்க அவர்களின் கணவர்கள் குழந்தைகளை மடியில் கட்டிக்கொண்டு விளையாட்டு காட்டிக்கொண்டு இருந்தனர்.
பால் கொழுக்கட்டை,குழிபணியாரம் என்று பாரம்பரிய திடீர் உணவுக் கடைகள் நிறைய பெருகியிருந்தது.மாலை வேளையில் நடனம் நாட்டியம் இசைக்கச்சேரி என்று விழா களைகட்டியிருந்தது.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பலரும் வந்திருந்தனர் இப்படி வந்தவர்கள் இங்கு நிலவும் மகிழ்ச்சியையும் கலைஞர்களின் சந்தோஷத்தையும் தங்கள் பகுதிகளுக்கும் வரும் ஆண்டுகளில் எடுத்துச் செல்ல வேண்டும் எங்கும் சந்தோஷம் பொங்கட்டும் பொங்கல் என்றாலே அது மகிழ்சியின் அடையாளமாக மாறட்டும்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X