சென்னை: தை மாதம் முதல் தேதியான நாளை (ஜன.,15) தமிழகம் முழுவதும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் பழனிசாமி ஆகியோர் பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
பன்வாரிலால் புரோகித், கவர்னர்:
கொண்டாட்டம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் திருநாளின் தொடக்கமானது. அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துகிறேன்.
பழனிசாமி, முதல்வர்:
தமிழக அரசு, வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தி வரும் திட்டங்களை பட்டியலிட்டுள்ளார். தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ்ந்திட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட செய்தி குறிப்பில், உலகெங்கும் பொங்கல் விழாவை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் தமிழர்கள் அனைவருக்கும், அன்பார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE