பொது செய்தி

தமிழ்நாடு

போகி கொண்டாட்டம்: சென்னையில் காற்றுமாசு அதிகரிப்பு

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (10)
Advertisement
சென்னை, போகி, வாகனங்கள், விமானம், முதல்வர்இபிஎஸ், முதல்வர், பழனிசாமி, எடப்பாடிபழனிசாமி

சென்னை: சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம் மற்றம் கடும் பனி காரணமாக, நகரின் பல பகுதிகள் புகைமண்டலமாக காட்சி அளித்தன. காற்றின் மாசுவும் அதிகரித்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், விமானம் தரையிறங்குவதும் பாதித்தது.





போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பது வாடிக்கை. முன்னர், பழைய டயர்கள், பிளாஸ்டிக் ரப்பர் பொருட்கள் எரிக்கப்பட்டன. இதனால், காற்றுமாசு அதிகரித்தது. இதனை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் நடவடிக்கை காரணமாக கட்டுப்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று(ஜன.,14) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனால், பல இடங்களில், பழைய பொருட்களை எரித்தனர். பனிமூட்டம் காரணமாக துகள்கள் கரையாமல் காற்றில் மாசு அதிகரித்தது.




Advertisement


சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அண்ணாசாலை, ஆலந்தூர் வேளச்சேரியில் அடையாறு உள்ளிட்ட பல இடங்களில்காற்றுமாசு அதிகரித்தது. காற்றில் புகை கலந்ததால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் புகைபோல் சூழ்ந்து காணப்பட்டது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை ஓட்டி சென்றனர்.






விமானங்கள் தாமதம்




கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதிலும், புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கப்பட்டது. டில்லி, மும்பை உள்ளிட்ட ந கரங்களுக்கு செல்லும் வாகனங்கள் தாமதமாக கிளம்பின.





முதல்வர் இ.பி.எஸ்., சென்னையிலிருந்து சேலம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், கடும் புகைமூட்டம் காரணமாக 1.45 மணி நேரம் காத்திருந்து பின்னர் அவர் கிளம்பி சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
14-ஜன-202020:11:42 IST Report Abuse
Sanny இதென்ன பிரமாதம், ஆஸ்திரேலியாவில் இதைவிட பலமடங்கு புகை மெல்போர்னில் மட்டும் 6 உயிர்கள் காவு.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
14-ஜன-202020:08:08 IST Report Abuse
Sampath Kumar இந்த பண்டிகை பழைய காலத்துக்கு ஓகே இப்ப தீ ஏரிப்பது என்பது காற்று மாசு படுவதை தவிர்க்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
14-ஜன-202019:12:33 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பனிமூட்டம் காரணமாகத்தான் விமானங்கள் தாமதம். ராணிப்பேட்டையில் பார்க்கமுடியாத அளவுக்கு பனி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X