சுவரை தாண்டி மாங்காய் பறித்த யானை; சாம்பியாவில் கூத்து| Dinamalar

சுவரை தாண்டி மாங்காய் பறித்த யானை; சாம்பியாவில் கூத்து

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (10)
Share
ல்யூசாகா : சாம்பியா நாட்டில் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதியின் சுவரை தாண்டி சென்று மாங்காய் பறித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.பொதுவாக யானைகள் பெரும்பாலும் பழங்கள், புற்கள், இலை, தழைகள் என அதன் பசிக்கு ஏற்ப உண்ணும். ஆனால் சாம்பியா நாட்டின் ல்யூசாகா நகரத்தில் உள்ள தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ளது எம்புவே தங்கும் விடுதி. இங்கு காட்டு யானை ஒன்று தங்கும்

ல்யூசாகா : சாம்பியா நாட்டில் காட்டு யானை ஒன்று தங்கும் விடுதியின் சுவரை தாண்டி சென்று மாங்காய் பறித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.



latest tamil news


பொதுவாக யானைகள் பெரும்பாலும் பழங்கள், புற்கள், இலை, தழைகள் என அதன் பசிக்கு ஏற்ப உண்ணும். ஆனால் சாம்பியா நாட்டின் ல்யூசாகா நகரத்தில் உள்ள தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ளது எம்புவே தங்கும் விடுதி. இங்கு காட்டு யானை ஒன்று தங்கும் விடுதியின் சுவரை தாண்டி சென்று உள்ளே வந்தது. இதனை கண்டு அங்கிருந்த சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடனும், ஒருவித பயத்துடனும் திகைத்து நின்றனர். அந்த யானை தனது கால்களை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து நிலை தடுமாறாமல் அந்த சுவரை தாண்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியதாக கூறப்படுகிறது.


latest tamil news



இது தொடர்பாக அந்த விடுதியின் மேலாளர் கூறுகையில், யானை நேர்த்தியாக உள்ளே வந்தது. யானையின் சமயோஜித புத்தியை கண்டு இங்கிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம். யானை இங்குள்ள மாம்பழங்களை சாப்பிட வந்திருக்கலாம்.


latest tamil news



மேலும் அது நிலைதடுமாறாமல் சுவரை தாண்டியதுடன், சில மாங்காய்களையும் பறித்து சென்றதாக சில ஊழியர்கள் கூறினர். இவ்வாறு பேசினார்.
யானை சுவரை தாண்டிய இந்த நிகழ்வு தற்போது வைரலாகி வருவதால் நெட்டிசன்கள் பலரும் இது தொடர்பாக கருத்துக்களை கூறி வருகின்றனர்.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X