சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020
Share
சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (ஜன.,15) மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியது. இதனையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சபரிமலையில் நாளை (ஜன., 15) ல் மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது.

சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை (ஜன.,15) மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளதால் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க துவங்கியது. இதனையொட்டி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



latest tamil news


கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் சபரிமலையில் நாளை (ஜன., 15) ல் மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. சபரிமலை கோவிலில் மகர விளக்கு பூஜை மிகவும் பிரசித்திபெற்றது. எனவே இதனை காண நாளை பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது.


latest tamil news



சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக டிச., 30 ல் சன்னதி நடை திறக்கப்பட்டது. இந்த பூஜையில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படவுள்ள திருவாபரணங்கள் அடங்கிய பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும். இது நாளை மாலை சபரிமலை சன்னிதானத்தை வந்தடையும். பின் ஆபரணங்கள் அணிவிக்கப்படடு சிறப்பு பூஜைகளுடன் மகரவிளக்கு பூஜை நடக்கும்.


latest tamil news



மகரவிளக்கு பூஜை நடக்கும் அதே நேரத்தில் சபரிமலையில் உள்ள பொன்னம்பலமேட்டில் மகரஜோதி எரியும். இறைவன் ஜோதி வடிவாக காட்சியளிப்பதாக நம்பப்படுகிறது. இதனை காண அங்குள்ள மலைப்பகுதியில் பக்தர்கள் தங்க தொடங்கியுள்ளனர். மகரவிளக்கு பூஜைக்கு முன் மகர சங்கரம பூஜையும் நடைபெறும். பல்வேறு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்கவே பாதுகாப்பு பணியில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளதாக கூறப்படுகிறது.


latest tamil news



Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X