மருத்துவமனையில் கைக்குழந்தையை கடித்துக்கொன்ற நாய்

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
பரூக்காபாத்: உ.பி.,யில் ஆப்ரேஷன் தியேட்டரில் நுழைந்த நாய், புதிதாய் பிறந்த குழந்தையை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாதில் ரவிக்குமார் என்பவர் தன் மனைவி காஞ்சனுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பிரசவத்திற்கான, சி பிரிவு
UP, Hospital, DogBite, Killed, BornBaby, OperationTheater, உபி, மருத்துவமனை, கைக்குழந்தை, நாய், ஆப்ரேஷன்_தியேட்டர்,

இந்த செய்தியை கேட்க

பரூக்காபாத்: உ.பி.,யில் ஆப்ரேஷன் தியேட்டரில் நுழைந்த நாய், புதிதாய் பிறந்த குழந்தையை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்காபாதில் ரவிக்குமார் என்பவர் தன் மனைவி காஞ்சனுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பிரசவத்திற்கான, சி பிரிவு ஆப்ரேஷன் தியேட்டருக்கு, காஞ்சனை மருத்துவமனை ஊழியர்கள் அழைத்து சென்றனர். சிறிது நேரத்திற்கு பின்னர், அவருக்கு, அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை கேட்டு, ரவிக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிரசவத்திற்கு பின்னர், காஞ்சன் மட்டும் தனி வார்டுக்கு மாற்றப்பட்டு, குழந்தையை ஆப்ரேஷன் தியேட்டரிலேயே வைத்துள்ளனர். இது குறித்து ரவிக்குமார் கேட்டதற்கு, சிறிது நேரம் அங்கேயே மருத்துவர்களின் பாதுகாப்பில் இருக்கும் என ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


latest tamil news



அடுத்த சில நிமிடங்களில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் சம்பவம் நடந்தேறியது. ஊழியர்களின் அலட்சியத்தால், ஆப்ரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த நாய், அங்கிருந்த குழந்தையை கடித்து குதறியுள்ளது. இதில், குழந்தையின் கழுத்து மற்றும் சில பாகங்களில் காயங்களுடன் குழந்தை இறந்துள்ளதை கண்டு ரவிக்குமார், காஞ்சன் மற்றும் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விவகாரம் அறிந்து மாவட்ட நீதிபதி மன்வேந்திர சிங், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும், தலைமை மருத்துவ அதிகாரி சந்திர சேகர், மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டதாகவும், விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
15-ஜன-202015:38:23 IST Report Abuse
Aarkay எப்படி குழந்தையை மட்டும் தனியாக விட்டார்கள்? கதவு என்ன ஆயிற்று? கொடுமை
Rate this:
Cancel
Xavier - Muscat,ஓமன்
15-ஜன-202013:28:33 IST Report Abuse
Xavier அட கொலைகார பாவிகளா இப்படி அநியாயமா ஒரு குழந்தையை கொன்னுட்டிங்களே
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-ஜன-202012:47:37 IST Report Abuse
ஜெயந்தன் உபி யில் இதெல்லாம் சாதாரணமப்பா.... மனித உயிர்களுக்கு மரியாதை இல்லை.. மாடுகள் மட்டுமே வாழத் தகுந்த மாநிலம்....இதை போன்ற ஆட்சியைத்தான் இங்கேயும் மலரும்... மலரும் ...என்று மல்லாக்க படுத்துக்க கொண்டு கனவு கண்டு கொண்டிருக்கிறதுகள் ...சிலதுகள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X