ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: புதுடில்லியில் கெஜ்ரிவால் போட்டி

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (3)
Advertisement
DelhiAssemblyElection,AAP,ArvindKejriwal,AamAadmiParty,Kejriwal, candidates_list,ஆம்ஆத்மி,கெஜ்ரிவால்,வேட்பாளர்_பட்டியல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: டில்லி சட்டசபையில் போட்டியிடும் 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. முதல்வர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியில் போட்டியிட உள்ளார். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரிக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

டில்லி யூனியன் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம், பிப்., 22ல் முடிவுக்கு வருகிறது. இதனையடுத்து வரும், பிப்., 8ல் ஒரே கட்டமாக, 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் முடிவுகள், பிப்., 11ல் அறிவிக்கப்பட உள்ளன. ஆம் ஆத்மி, பா.ஜ., மற்றும் காங்., இடையே யார் ஆட்சியை பிடிப்பார்கள் என மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., இடையே தான் நேரடி போட்டி இருக்கும் என, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த, 2015ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, 70ல், 67 தொகுதிகளில் அசத்தல் வெற்றி பெற்றது. மீதமுள்ள மூன்று தொகுதிகளை, பா.ஜ., கைப்பற்றியது. மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு மீண்டும் அமைந்த பிறகு, டில்லியில் நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள ஏழு தொகுதிகளையும், பா.ஜ., கைப்பற்றியது.

மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்குடன், அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டு வருகிறார். காற்று மாசு, பாதுகாப்பான குடிநீர் என, பல பிரச்னைகள், அவருக்கு சாதகமாக இல்லை. பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர், ஆம் ஆத்மிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து தர உள்ளார். மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, தன் பிரசாரத்தை ஏற்கனவே துவக்கி விட்டது. இந்நிலையில், 70 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.


இதில், முதல்வர் கெஜ்ரிவால் புதுடில்லி தொகுதியிலும், துணை முதல்வர் மனிஷ் சிசோடிய பட்பார்கஞ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 70 வேட்பாளர்களில் 12 பேர் 30 வயதுக்கும் குறைவானவர்கள். 46 எம்.எல்.ஏ.,க்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நிறைய புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரிக்கு பதிலாக, துவாரகாவில் வினய் மிஸ்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தில் அதிக சம்பளம் வாங்கும் வேலையிலிருந்த ஆதர்ஷ் சாஸ்திரி, கடந்த தேர்தலில், ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுவதற்காக அப்பணியை துறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜன-202016:29:20 IST Report Abuse
Endrum Indian அய்யய்யோ நான் கூட இந்த சொறிவால் டாஸ்மாக்கினாட்டில் போட்டியிடப்போகின்றார் என்று நினைத்து விட்டேன்???டில்லி சட்டசபைக்கு டில்லியல்லாமல் வேறு எங்கு போட்டியிடமுடியும்???
Rate this:
Share this comment
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
14-ஜன-202023:03:51 IST Report Abuse
uthappa காங்கிரசின் ஊழலை மக்கள் மறக்க தயார் இல்லை.இருந்தாலும் அங்கேயும் மகாராஷ்ட்ரா நிலை வரலாம், காங்கிரஸ் ஏழு எம் எல் ஏ க்கள் தேர்வு பெற்று அமைச்சர் ஆவார்கள். பா. ஜ., 34, AAP 29, INC 7 என்று முடிவு வரலாம். மக்களால் முழுதும் நிராகரிக்கப்பட்ட பா. ஜ., ....என்று காங்கிரஸ், தேர்தலில் நிற்காத கம்யூனிஸ்டு ஊரெங்கும் கொண்டாடும்.
Rate this:
Share this comment
Endrum Indian - Kolkata,இந்தியா
15-ஜன-202016:30:24 IST Report Abuse
Endrum IndianChances are very bright for the above said results....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X