பொது செய்தி

தமிழ்நாடு

அரசியலும், சமுதாயமும் மிகவும் கெட்டுப்போயுள்ளது: ரஜினி பேச்சு

Updated : ஜன 14, 2020 | Added : ஜன 14, 2020 | கருத்துகள் (130)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை : துக்ளக் இதழின் 50ம் ஆண்டு நிறைவு விழாவில், அரசியலும், சமுதாயமும் மிகவும் கெட்டுப்போயுள்ளது என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.





சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் செவ்வாயன்று துக்ளக் இதழின் 50ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது.


சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று (ஜன., 14) துக்ளக் இதழின் 50 ம் ஆண்டு நிறைவு விழா நடந்தது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். துக்ளக் இதழின் சிறப்பு மலரை வெங்கையா வெளியிட, ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:





பல ஆண்டுகளாக மக்களுக்காக உழைத்து துணை ஜனாதிபதி ஆகியவர் வெங்கையா நாயுடு. மக்கள் சேவை என்பது தந்தைக்குரிய பதவி. சோவை தொடர்ந்து துக்ளக் இதழை சிறப்பாக கொண்டு செல்கிறார் குருமூர்த்தி. சோ ஒரு ஜீனியஸ். அவர் ஜீனியஸ் என்பதை நிரூபிக்க தேர்ந்தெடுத்த துறை பத்திரிக்கை துறை. அதில் அவர் எடுத்த ஆயுதம் துக்ளக். சோ ராமசாமியையும், துக்ளக்கையும் பெரிய அளவில் பிரபலப்படுத்தியவர்களில் இருவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஒருவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மற்றொருவர் பக்தவத்சலம். முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்பார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்.





தற்போதைய சூழலில் காலம், அரசியல், சமுதாயம் மிகவும் கெட்டுப்போயுள்ளது. சோவிற்கு பிறகு, துக்ளக் பத்திரிகை நடத்தப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. சோ மாதிரியான பத்திரிக்கையாளர் தான் தற்போது மிக அவசியம். பால் போன்ற உண்மை செய்தியில் தண்ணீரை கலக்க கூடாது. கவலைகளை நிரந்தரமாக்கிகொள்வதும், தற்காலிகமாக்கி கொள்வதும் நமது கையில்தான் உள்ளது. இவ்வாறு ரஜினிகாந்த பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (130)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
17-ஜன-202018:29:40 IST Report Abuse
TAMILAN தமிழக மக்களின் பணத்தை எப்படி வசூல் செய்து தன குடும்பத்திற்ற்கு சேர்க்க வேண்டும் என்று தெரிந்து கொண்ட பிளக்க தெரிந்தவர், ,
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
17-ஜன-202015:51:37 IST Report Abuse
oce கெட்டுபோன அரசியலுக்குள் ரஜினி நுழைய அச்சப்படுகிறார். வளைந்திருந்த தமிழக அரசியலை தமது செங்கோலால் நிமிர்த்தி காட்டியவர். புரட்சி தலைவர். பொன்மன செம்மல் மாண்புமிகு முன்னாள் தமிழக முதல்வர் நினைத்தார். அதை செய்து முடித்தார்.. அது போல் ரஜினியும் செய்யலாம். குடியை சுயமரியாதை கட்சி ஆட்சியில் அறிமுக படுத்தியாதால் தமிழரின் சுய மரியாதை திருடப்பட்டு விட்டது.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
17-ஜன-202015:42:47 IST Report Abuse
oce முரசோலி பேரில் உள்ள மகிமை துக்களக் பேரில் இல்லை. பெயரை கவர்ச்சியாக மாற்றினால் இன்னும் சிறப்பாக மக்களை போய் சேரும். அடி மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை மக்களை கவர்ச்சிகராமாக பேசி ஏம்ற்ற தெரிந்தவர்கள் திமுகவினர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X