அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாய மின் இணைப்பு விபரம் கேட்கிறது அரசு

Added : ஜன 14, 2020
Advertisement

விரைவு திட்டத்தில், ஒவ்வொரு திறனிலும் வழங்கப்பட்டு உள்ள விவசாய மின் இணைப்புகளின் விபரங்களை வழங்குமாறு, மின் வாரியத்திடம், தமிழக அரசு கேட்டுள்ளது.

தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு, சாதாரணம், சுயநிதி போன்ற பிரிவுகளில், மின் இணைப்பு வழங்குகிறது. சாதாரண பிரிவில், மின்வழித்தட செலவும், மின்சாரமும் இலவசம்; சுயநிதி பிரிவில், மின் வழித்தட செலவை, விவசாயிகள் ஏற்க வேண்டும்; மின்சாரம் மட்டும் இலவசம்.சுயநிதி பிரிவில், 'தத்கல்' எனப்படும், விரைவு திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு, 10 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கு ஏற்கனவே, விவசாய மின் இணைப்பு கேட்டவர்கள் மட்டும், விண்ணப்பிக்க வேண்டும்.

விரைவு திட்டத்தில், ஐந்து முதல், 15 குதிரை திறன் மோட்டார் மின் இணைப்புகள் வழங்க, 2.50 லட்சம் ரூபாய் முதல், நான்கு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதன்படி, 2019ல், 10 ஆயிரம் விரைவு இணைப்பு வழங்கும் பணி, அதே ஆண்டு அக்டோபரில் துவங்கியது. அதை விட, அதிகம் பேர் விண்ணப்பித்தனர்.இதனால், கூடுதலாக விரைவு திட்டத்தில் இணைப்பு வழங்க அனுமதிக்குமாறு, மின் வாரியம், தமிழக அரசிடம் அனுமதி கோரியது. உள்ளாட்சி தேர்தலால், அந்த விவகாரத்தில், அரசு அமைதி காத்தது.

இந்நிலையில், ஏற்கனவே விரைவு திட்டத்தில், மாவட்டம் வாரியாக வழங்கிய இணைப்புகள்; அதற்கு தேவைப்படும் மின்சாரம் உள்ளிட்ட விபரங்களை அளிக்குமாறு, வாரியத்திடம் அரசு கேட்டுள்ளது. அந்த விபரங்களை தயாரிக்கும் பணியில், வாரிய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X