பொது செய்தி

தமிழ்நாடு

மகிழ்ச்சியை பகிர்வோம்

Added : ஜன 14, 2020
Advertisement

மகிழ்ச்சி என்பது, மனிதருக்குள் பகிர்ந்து கொள்ளக் கூடிய, தனிப்பட்ட விஷயமாக கருதாமல், மகிழ்வை, அவர்கள் நமக்கு செய்து வரும் உதவியை, நம்மால் அவர்களும் அவர்களால் நாமும் பெறும் பெருமையை, பிற உயிர்களோடும் பகிர்ந்து கொள்வது தான் சிறப்பு என, நமக்கு உணர்த்துவது மாட்டுப் பொங்கல்.

நம் வாழ்வாதாரத்திற்கு, தலைமுறைகளுக்கு, வளத்தையும், செழிப்பையும் அளிக்கிற உழவுத் தொழிலுக்கு உதவும் ஆநிரைகளை தொழுது வணங்குவது தான், நம் இன்றைய கடமை.நம்மோடு என்றும் பிரிக்க முடியாத உறவாக இருப்பதால், பசுவை கோமாதா என்று போற்றி, வழிப்பாடு செய்கிறோம்.வீட்டுப் பொங்கலுக்கு, மறு நாள் மாட்டுப் பொங்கல் கிராமங்களில், மாட்டுப் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்படும் என்பது, நமக்கு தெரிந்த செய்தி!அன்றைய தினம், அதிகாலையில், சகல சிவாலயங்களிலும், நந்திக்கு உணவு மாலை அணிவிப்பர்.

அந்த அலங்காரத்தை கண்டு ரசித்து வழிபட்டால், நலங்களும், வளங்களும் வந்து சேரும்.பொங்கல் பண்டிகையென்றால், வீடுகள் புதுப் பூச்சு காணும்; மாட்டுப்பொங்கல் என்றால் மாடுகள், பசுக்களின் கொம்புகளுக்கு, புது வண்ணம் பூசி அழகுப்படுத்துவர். நன்கு குளிப்பாட்டி, அலங்காரம் செய்து, மாட்டுப் பொங்கல் தினத்தின் போது படையலிட்டு வழிபாடு செய்வர். காளை நம் வயல்களை உழுகிறது; அறுவடைப்பணியில் உதவுகிறது; வண்டி இழுக்கிறது. உழைப்பின் சின்னமாய் ஆண்டெல்லாம், நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி கூறும் தினமாக இது கொண்டாடப்படுகிறது.

இன்றைய தினத்தின் போது, மாடுகளுக்கு ஒரு வேலையும் தர மாட்டார்கள். கழுத்தில், புது மணி கட்டி, கொம்புகளை சீவி, சுதந்திரமாக திரிய விடுவர்.(இந்த இடத்தில் தான் ஜல்லிக்கட்டு தோன்றியிருக்கிறது) மாட்டுப் பொங்கலின் போது, கிராமங்கள் தோறும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.தைப்பொங்கல் நாளின் மறு நாள், மாட்டுப் பொங்கல் என்பது, தமிழர்களால் கொண்டாடப்படும் வழக்கமாகும். தொழுவத்திலேயே, பொங்கல் பொங்கி, கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு, ஆவினம் வணங்கப்படும்.

உழவுக்கும், பால் தரும் ஆவினங்களுக்கும் நன்றி சொல்வதாகும்; மாடுகளை நீராட்டி, மாடுகளின் கொம்புகளை சீவி, பளபளக்கும் வகையில், வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டி விடுவர். குங்குமப் பொட்டிட்டும், புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் அலங்கரிப்பர்.பசுக்களில் எல்லா தேவர்களும் இருப்பதாலும், பசுக்களை வணங்கி, வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.இதன்பின், பசு, காளை, எருமை என, அனைத்து கால்நடைகளுக்கும், பொங்கல், பழம் கொடுப்பர்.

பரங்கி இலை அல்லது வாழை இலையில் பொங்கலை வைத்து மாட்டிற்கு பிரசாதமாக வழங்குவது உத்தமம். நைவேத்தியத்தில், கொஞ்சம் நம் குடும்ப உறுப்பினர்கள் சாப்பிட வேண்டும்; அப்போது தான், சலிக்காது உழைத்து வாழும் குணம் நம்மை வந்து சேரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X