புதுடில்லி : ரிசர்வ் வங்கியின், புதிய துணை கவர்னராக, மைக்கேல் தேவப்ரதா பாத்ரா நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், மூன்று ஆண்டுகள் இந்த பதவியை வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஜூன் மாதத்தில், துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தன் பதவியை ராஜினாமா செய்துவிட்ட காரணத்தால், காலியாக இருந்த அவருடைய இடத்துக்கு, பாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, நிதிக் கொள்கை துறையில் நிர்வாக இயக்குனராக இருக்கும் பாத்ரா, ரிசர்வ் வங்கியின், நான்காவது துணை கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதிக் கொள்கை துறையை, தொடர்ந்து பாத்ராவே நிர்வகித்து வருவார். இதற்கு முன், விரால் ஆச்சார்யா இந்த துறையை, துணை கவர்னராக இருந்த போது கவனித்து வந்தார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், அதிகபட்சம் நான்கு துணை கவர்னர்களை கொண்டிருக்கலாம்.

தற்போது, என்.எஸ்.விஸ்வநாதன், பி.பி.கனுங்கா, எம்.கே.ஜெயின் ஆகிய மூவரும் துணை கவர்னர்களாக உள்ளனர். இந்நிலையில், நான்காவது துணை கவர்னராக, பாத்ரா நியமிக்கப்பட்டுள்ளார். பாத்ரா, மும்பை ஐ.ஐ.டி., ஹார்வேர்டு பல்கலை ஆகியவற்றில் கல்வி பயின்றவர். ரிசர்வ் வங்கியில், 1985ம் ஆண்டிலிருந்து பணிபுரிந்து வருகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE