சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்: மீண்டும் மரம்

Added : ஜன 14, 2020
Advertisement

இயற்கையை பாதுகாப்பதில் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவின் வாஷிங்டன் வனப்பகுதியில் ஆய்வு நடத்திய ஆராய்ச்சியாளர்கள், 'காடுகளில் தீ விபத்தில் எரிந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். அப்பகுதியில் புதிதாக விதைகளை துாவி மரங்களை வளர்க்க வேண்டும். அப்போதுதான் நீர் வளத்தை தக்க வைக்க முடியும். ஏனெனில் மரங்கள்தான், மண்ணுக்குள் இருக்கும் தண்ணீரை மேல் பகுதிக்கு கொண்டு வருகிறது. மரங்கள் இல்லையெனில் தண்ணீர் வேறு இடத்துக்கு சென்று விடும்' என தெரிவித்தனர்.


தகவல் சுரங்கம்: நீளமான கால்வாய்

சீனாவின் 'கிராண்ட் கால்வாய்' உலகின் நீளமான, பழமையான கால்வாய் என அழைக்கப்படுகிறது. நீளம் 1,776 கி.மீ., தலைநகர் பீஜிங்கில் தொடங்கி ஹாங்ஜோவ் வரை செல்கிறது. சில இடங்களில் கடல் மட்டத்தில் இருந்து 3 அடி ஆழத்திலும், சில இடங்களில் 138 அடி உயரத்திலும் கால்வாய் அமைந்துள்ளது. யுனெஸ்கோவின் பண்பாட்டு சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மஞ்சள் ஆறு மற்றும் யாங்ட்ஜ் ஆறுகள் இக்கால்வாயில் இணைகின்றன. கால்வாயின் சில பகுதிகள் 5ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டவை. இக்கால்வாயில் படகு, கப்பல்கள் செல்கின்றன.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X