பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்குமா?

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement

பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் முடிந்த நிலையில், ஊதிய உயர்வு அறிவிப்பை, தமிழக அரசு விரைவாக வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு, ரேஷன் ஊழியர்களிடம் எழுந்துள்ளது.தமிழகத்தில், கூட்டுறவு துறையின் கீழ், 33 ஆயிரம் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.

இவற்றில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஓய்வுபெறும் வரை, மாதம், 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப் படுகிறது. இதனால், ஊதிய உயர்வு வழங்குமாறு, அரசை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.இது குறித்து பரிசீலிக்க, கூடுதல் பதிவாளர் தலைமையில், கூட்டுறவு துறை அமைத்த குழு, தன் அறிக்கையை, 2019 ஜனவரியில், அரசிடம் சமர்ப்பித்தது. ஓராண்டாகியும், ஊதிய உயர்வு வழங்காததால், ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கடைகளில், நேற்று முன்தினம் வரை, 1.96 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பொருட்களுடன், 1,000 ரூபாய் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இதுகுறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்க பொது செயலர் தினேஷ் கூறியதாவது:எந்தப் பிரச்னையும் இல்லாமல், கடும் சிரமத்தையும் பொறுத்து, ரேஷன் ஊழியர்கள், கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசை வழங்கினர். அதேபோல், ஊழியர்களுக்கு, பொங்கல் பரிசாக, அரசு ஊதிய உயர்வை, விரைவாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
15-ஜன-202008:44:15 IST Report Abuse
Ramachandran Rajagopal சூலை 1992முதல் சம வேலைக்கு சம ஊதியம் ரேஷன் கடை பணியாளர்களுக்கு 12.11.1993தேதிய அரசு ஆணை மூலம் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அதனை 6.1.1994தேதிய அரசு ஆணை மூலம் அவ்வாறு ஊதியம் செய்யவில்லை என பறித்துவிட்டது. இது அரசமைப்பு உறுப்பு படி செல்லத்தக்கது அல்ல. எனவே இதன் மூலம் ரூபாய் ஐநூறு கோடி அரசு சுரண்டியுள்ளதை வழங்க நான் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன் தேசிய மனித உரிமைகள் கமிஷன் 24.11.2019அன்று எட்டு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுத்து தகவல் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் நபர் ஒன்றிற்கு ரூபாய் பதினைந்து லட்சம் வரை கிடைக்கும்.மேலும் அந்தந்த கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வழங்கும் ஊதியம் தொடர்ந்து வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு.அரசாங்கத்தை கோரி வந்தால் இதில் லாபமில்லை என்பதால் ஓரிரு ஆயிரம் கூடுதலாகக் கிடைக்கும் வகையில் மோசடி செய்வர். சட்டப்படி நடவடிக்கை எடுக்க எந்த சங்கமும் இல்லை என்பதால் ரேஷன் கடை பணியாளர்களுக்கு இந்நிலை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X