பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.21 ஆயிரம் கோடிக்கு நிலக்கரி 'டெண்டர்' கடைசி தேதி நீட்டிப்பு

Added : ஜன 14, 2020
Advertisement
 ரூ.21 ஆயிரம் கோடிக்கு நிலக்கரி 'டெண்டர்' கடைசி தேதி நீட்டிப்பு

சென்னை : ஒடிசாவில் உள்ள, சந்திரபிலா சுரங்கத்தில் இருந்து, தமிழகத்திற்கு நிலக்கரியை அனுப்பும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான, 'டெண்டர்' தேதியை, மின் வாரியம் நீட்டித்துள்ளது.

தமிழக மின் வாரியத்தின், அனல் மின் நிலையங்களில் பயன்படுத்த, ஒடிசா மாநிலத்தில் உள்ள, 90 கோடி டன் இருப்பு உடைய, சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்தை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.அதை, 2016ல், தமிழகத்திற்கு ஒதுக்கினாலும், தற்போது தான், நிலக்கரியை எடுத்து வருவதற்கான ஆயத்த பணிகளை, மின் வாரியம் துவக்கி உள்ளது.இதற்காக, சந்திரபிலா சுரங்கத்தை மேம்படுத்தி, அங்கிருந்து ஆண்டுக்கு, 10 லட்சம் டன் என, 35 ஆண்டுகளுக்கு, நிலக்கரியை எடுத்து, தமிழகத்திற்கு அனுப்பும் பணி, ஒப்பந்த நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணிகளை, 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 35 ஆண்டுகளுக்கு மேற்கொள்வதற்காக, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியம், 2019 நவம்பர், 29ல், 'டெண்டர்' கோரியது. அதில் பங்கேற்க, 2020 ஜனவரி, 13, கடைசி நாளாக அறிவிக்கப் பட்டது.இந்த பணி தொடர்பாக, மின் வாரியம் சார்பில், சமீபத்தில் நடத்தப்பட்ட, முதலீட்டாளர்களுக்கான விளக்கக் கூட்டத்தில், நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன.

அவை, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளன. இந்நிலையில், சந்திபிலாவில் இருந்து, நிலக்கரிஅனுப்பும் பணிக்கான டெண்டர் கடைசி தேதியை, மின் வாரியம், இம்மாதம், 28ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X