சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 போலீஸ் அதிகாரிகளுக்கு  ரூ.1 லட்சம் அபராதம்

சென்னை : மனித உரிமை மீறலில் ஈடுபட்ட போலீசாருக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லை சேர்ந்தவர் முருகன். இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:என் சகோதரி வாசுகி, மதுரையில் கணவருடன்வசித்தார். கணவர் இறந்த பின், அவரது குடும்பத்தினர், சகோதரிக்கு பல்வேறு வகையில், தொந்தரவு கொடுத்தனர். சகோதரியின் கணவர் குடும்பத்தினர் அளித்த புகாரில், செல்லுார் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார், எஸ்.ஐ., ஜெய்சங்கர் ஆகியோர், என் தந்தையை தாக்கி, பொய் வழக்கு பதிவு செய்தனர். எனவே, போலீசார் இருவர் மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், 'பாதிக்கப்பட்ட மனுதாரர் குடும்பத்திற்கு, ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். அந்த தொகையை போலீஸ் அதிகாரிகளிடமிருந்து தலா, 50 ஆயிரம் ரூபாயாக வசூலித்து கொள்ளலாம். மேலும், போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Ravindran - Chennai,இந்தியா
15-ஜன-202011:00:06 IST Report Abuse
Parthasarathy Ravindran வில்சன் கொலைக்கு ஒன்றும் சொல்லவில்லையே. எவருக்கு மனித உரிமை வேண்டும் என்று நிர்ணயிப்பது ஆணையமே.கேவலம்
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
15-ஜன-202005:50:48 IST Report Abuse
D.Ambujavalli கஞ்சி விறைப்புடன் காக்கியை அணிந்ததுமே தான் பெரிய கொம்பன் என்ற மமதை வந்து ஆட்டம் போட ஆரம்பித்துவிடுகிறார்கள் இவர்களை சஸ்பெண்ட் செய்வதுடன், பதவி, சம்பள உயர்வையும் ஒரு நாலு வருஷத்துக்கு நிறுத்தினால் கொஞ்சம் அடங்குவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X