பொது செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரியில் மலர் கண்காட்சி

Added : ஜன 14, 2020
Share
Advertisement

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கன்னியாகுமரி தோட்டக்கலை பூங்காவில், நாளை முதல் மூன்று நாட்கள், மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலைத்துறை வாயிலாக, பல்வேறு மாவட்டங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில், நீலகிரி மாவட்டம், ஊட்டி; திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்; சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள பூங்காக்களில், கோடைகாலங்களில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. உலக அளவில் பிரபலமான இக்கண்காட்சி, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணியரை கவரும் வகையில், நான்கு கோடி ரூபாய் செலவில், 15 ஏக்கரில் சுற்றுலா பூங்காவை, தோட்டக்கலைத் துறை அமைத்துள்ளது.

இந்த பூங்கா, 2018 ஏப்ரலில், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது. இந்த பூங்காவில், புதிய முயற்சியாக, பொங்கல் பண்டிகையை ஒட்டி, நாளை முதல், 18ம்தேதி வரை, மூன்று நாட்கள் மலர் கண்காட்சிக்கு தோட்டக்கலை துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர். பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X