பொது செய்தி

தமிழ்நாடு

'இயற்கையை மீட்டெடுக்க பண்டிகைகள் அவசியம்'

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'இயற்கையை மீட்டெடுக்க  பண்டிகைகள் அவசியம்'

சென்னை : ''இயற்கையை மீட்டெடுக்க, பண்டிகை கொண்டாட்டம் அவசியம்,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

சென்னை, கவர்னர் மாளிகையில் பொங்கல் பெருவிழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர், பொங்கல் வைத்து வழிபட்டனர். தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பலரும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.நிகழ்ச்சியில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:தென் மாநிலங்களின் பாரம்பரியமிக்க விழா என்றால், அது பொங்கல் விழா தான். முன்னர் விவசாயிகளால் கொண்டாடப்பட்டது;

இன்று அனைவராலும் கொண்டாடப்படுகிறது.இயற்கை தான் நம் எதிர்காலம். இந்தியாவின் இயற்கையை மீட்டெடுக்க, நம் பண்டிகைகளை முறையாக கொண்டாட வேண்டும்.நம் நாட்டில், 60 சதவீதம் விவசாயத்தை நம்பியே உள்ளோம். இந்தியாவில், விவசாயம்பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயம் மேம்பட, விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.பின், தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில், பசுமை புரட்சிக்காக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு, 2020ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான விருதை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி கவுரவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
16-ஜன-202003:12:27 IST Report Abuse
 nicolethomson உண்மைதான் சார், இதனை உணர்ந்த வெளிநாட்டு கைக்கூலிகள் மக்களின் மனம்மாற்ற முன்னாள் முதல்வர் மூலம் தமிழ் புத்தாண்டினையே மாற்றி எழுத வைத்தனர் , இன்னமும் அந்த கட்சியினை நாம் நம்பிக்கொண்டுள்ளோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X