பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த ஊருக்கு 16 லட்சம் பேர் பயணம்

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட, சென்னையில் இருந்து, 16 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

தமிழகத்தின் தலைநகரமான சென்னையில், ஒரு கோடி பேர் உள்ளனர். இவர்களில், பாதிக்கும் மேற்பட்டோர், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்களில் பாதி பேர், தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை கொண்டாட, தங்களது சொந்த ஊர்களுக்கு, ஒரு வாரமாகவே, படிப்படியாக பயணித்தனர்.இந்நிலையில், தமிழக அரசு போக்குவரத்து கழகம், மூன்று நாட்களாக, 16 ஆயிரம் பஸ்களை இயக்கியது. அதில், ஒன்பது லட்சம் பேர் பயணித்தனர். ஆம்னி பஸ்கள், சொந்த வாகனங்களில், 2.5 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

மேலும், தெற்கு ரயில்வே சார்பில், ஒவ்வொரு நாளும், சென்னையில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு 60 ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில், தலா, 2,500 பேர் வீதம், மூன்று நாட்களில், 4.5 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.இதன்படி, மூன்று நாட்களில், சென்னையில் இருந்து மட்டும், 16 லட்சம் பேர் பயணித்துள்ளனர். இந்தாண்டு படுக்கை, கழிப்பறை, 'ஏசி' வசதிகள் உடைய, புதிய அரசு பஸ்கள் அதிகம் இயக்கப்பட்டதால், ஒன்பது லட்சம் பேர், அரசு பஸ் பயணத்தை தேர்ந்தெடுத்தனர்.

இருப்பினும், சென்னையில், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களிலும், தொலைதுார ரயில்களிலும், கூட்டம் நிரம்பி வழிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X