அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., போராட்டம் நடத்தும் ; ஸ்டாலின்

Added : ஜன 14, 2020
Advertisement
தி.மு.க., போராட்டம் நடத்தும் ; ஸ்டாலின்

சென்னை : 'தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்கு எதிராக, விரைவில், தி.மு.க., போராட்டம் நடத்தும்' என, அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: நாடு முழுவதும், மக்கள் கொதித்து எழுந்து, போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல், அ.தி.மு.க., அரசு தொடர்ந்து மவுனம் காத்து வருவது, தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.மக்களுக்கு நெருக்கடியும், துயரமும் அளிக்கும் கணக்கெடுப்பு குறித்து, அ.தி.மு.க., அரசு தொடர்ந்து அமைதி காக்கக்கூடாது. தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணியை, தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என, முதல்வர் இ.பி.எஸ்., உடனே அறிவிக்க வேண்டும்.

இல்லாவிட்டால், நாடே திரும்பி பார்க்கும் வகையில், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்களுடன் இணைந்து, தி.மு.க., மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தும் என, எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X