சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்பது சாமி சிலைகள் திருட்டில் கோவில் குருக்கள், டிரைவர் கைது

Added : ஜன 14, 2020
Advertisement
 ஒன்பது சாமி சிலைகள் திருட்டில் கோவில் குருக்கள், டிரைவர் கைது

சென்னை : பல கோடி ரூபாய் மதிப்புள்ள, சாமி சிலைகள் திருட்டு வழக்கில், கோவில் குருக்கள் மற்றும் கார் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் பஸ் நிலையம் அருகே, மர்ம நபர்கள் இருவர், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, 1.5 அடி உயரமுள்ள பஞ்சலோக சாமி சிலையை, 1.20 கோடி ரூபாய்க்கு விற்க இருப்பதாக பேசி உள்ளனர்.மர்ம நபர்கள்இதை, அப்பகுதியில் இருந்தோர் கவனித்து, உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் கூறினர். இதையடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், மர்ம நபர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.

அவர்கள், நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்தை சேர்ந்த, கோவில் குருக்கள் பைரவ சுந்தரம், 60, கார் டிரைவர் செல்வம், 45 என, தெரியவந்தது.அவர்களின் உடமைகளை சோதனை செய்த போது, அதில், 1.5 அடி உயரமுள்ள, அம்மன் சிலை இருந்தது. அவர்களின் வீடுகளில் சோதனை செய்த போது, வள்ளி, தெய்வானை, பெருமாள், ஆனந்த நடராஜர் என, எட்டு சிலைகள் இருந்தன. இந்த சிலைகள் பஞ்சலோகத்தால் செய்யப்பட்டதா என்பது குறித்து, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக, பைரவ சுந்தரம் மற்றும் செல்வத்தை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த சிலைகளை மீட்டனர். சிலை திருட்டில் ஈடுபட்ட முக்கிய புள்ளிகளையும் தேடி வருகின்றனர்.ஆய்வுஇதுகுறித்து, சென்னையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., அபய்குமார் சிங் கூறியதாவது:மீட்கப்பட்டுள்ள ஒன்பது சிலைகளின் தொன்மை குறித்தும், எந்தெந்த கோவில்களுக்கு சொந்தமானவை என்பது குறித்தும், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உதவியுடன், ஆய்வு செய்து வருகிறோம்.

ஒன்றிரண்டு சிலைகள், எந்த கோவிலில் திருடப்பட்டவை என, அடையாளம் காணப்பட்டு உள்ளன. உரிய விசாரணைக்கு பின், இந்த சிலைகள் கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X