கோர்ட் செய்தி

தமிழ்நாடு

திருமணமான மகளின் வாரிசாக தாயாரை சேர்த்த சான்றிதழ் ரத்து

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை : இறந்த மனைவியின் வாரிசாக, அவரது தாயாரை சேர்த்ததை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த கிருஷ்ணா என்பவர் தாக்கல் செய்த மனு:


நடவடிக்கை


என் மனைவி, ௨௦௧௩ல் இறந்து விட்டார். எங்களுக்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார். இறந்த என் மனைவிக்கு, நானும், மகளும் தான் வாரிசு. ஆனால், அமைந்தகரை தாசில்தார் அளித்த வாரிசு சான்றிதழில், என் மாமியார் பெயரும் இடம் பெற்றுள்ளது.மாமியாரின் பெயரை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் மற்றும் அமைந்தகரை தாசில்தாருக்கு, மனு அனுப்பினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. என் மனுவை பரிசீலிக்க, கலெக்டர் மற்றும் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.ஸ்ரீதர் ஆஜரானார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:ஹிந்து மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் இறந்தால், அவரது மனைவி, குழந்தை, தாயாரும் சட்டப் பூர்வ வாரிசாக வருவர். பெண் இறந்தால், அவரது கணவர் மற்றும் குழந்தைகள் தான் வாரிசாக வருவர். இவர்கள் இல்லை என்றால், கணவரின் வாரிசுகள் பரிசீலிக்கப்படுவர். அவர்களும் இல்லை என்றால் தான், பெண்ணின் பெற்றோர், வாரிசாக வருவர்.


உத்தரவு


இந்த வழக்கை பொறுத்தவரை, கணவர், மகளை விட்டு விட்டு, பெண் இறந்துள்ளார். இந்த இருவருக்கு மட்டுமே, சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ் வழங்க முடியும். எனவே, தாசில்தார் வழங்கிய வாரிசு சான்றிதழ் ரத்து செய்யப்படுகிறது. கணவர், மகளை மட்டுமே வாரிசாக காட்டி, சான்றிதழ் வழங்கும்படி, தாசில்தாருக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X