பொது செய்தி

தமிழ்நாடு

ஜெருசலேம் செல்வோருக்கு நிதியுதவி

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை : ஜெருசலேம் பயணம் செல்வோர், நிதியுதவி கோரி விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, பிப்., 28 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.தமிழகத்தை சேர்ந்த, அனைத்து பிரிவினர்களையும் உள்ளடக்கிய, 50 கன்னியாஸ்திரிகள் உட்பட, 600 கிறிஸ்தவர்கள், நடப்பாண்டு ஜெருசலேம் புனிதப்பயணம் செல்ல, தமிழக அரசு சார்பில், ஒருவருக்கு, 20 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், நிதியுதவி பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, பிப்., 28 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில், இலவசமாக பெறலாம். மேலும், www.bcmbcmw.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X