சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர் கடத்தல் கோர்ட்டில் மனு தாக்கல்

Added : ஜன 14, 2020
Advertisement

-திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியம், இரண்டாவது வார்டு கவுன்சிலராக, அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பூங்கொடி, 28, வெற்றி பெற்றார். இவர், 6ம் தேதி பதவியேற்றார்.

பதவியேற்ற உடன், நான்கு மாத கைக்குழந்தையுடன், திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த, 9ம் தேதி அதிகாலையில், பூங்கொடி, அவரது நான்கு மாத கைக்குழந்தை, தாய் வசந்தி ஆகியோரை, சிலர் காரில் அழைத்து சென்றாக கூறப்படுகிறது. இதையடுத்து, பூங்கொடியின் கணவர் கோட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நேற்று முன்தினம், கடத்தப்பட்ட தன் மனைவி, குழந்தை, மாமியாரை கண்டு பிடித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என, ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவில், திருத்தணியை சேர்ந்த, ஜோதிநாயுடுவின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மனைவி, குழந்தையை வீட்டுக்கு அனுப்பும்படி கேட்டபோது, அவர் மிரட்டல் விடுத்ததாகவும், இது குறித்து, போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X