பொது செய்தி

தமிழ்நாடு

காலம், அரசியல், சமுதாயம் கெட்டுப்போச்சு!

Added : ஜன 14, 2020
Advertisement
 காலம், அரசியல், சமுதாயம் கெட்டுப்போச்சு!

சென்னை : ''காலம் , அரசியல், சமுதாயம் ரொம்ப கெட்டுப்போச்சு,'' என, நடிகர் ரஜினி வருத்தம் தெரிவித்தார்.

'துக்ளக்' இதழின், 50ம் ஆண்டு விழா, அதன் ஆசிரியர் குருமூர்த்தி தலைமையில் சென்னையில் நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். விழாவில், துக்ளக் இதழின், 50ம் ஆண்டு மலர் வெளியிடப்பட்டது. விழாவில், நடிகர் ரஜினி பேசியதாவது: இந்த விழாவுக்கு, துணை ஜனாதிபதி வந்துள்ளார். அவருக்கு, பொது நிகழ்வுகளில் எதை பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. கட்டுப்பாடுஅவர் கலந்து கொள்ளும் விழாக்களில் பங்கெடுக்கும் நாமும், எதைப் பேச வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. எதையும் பேசுவதற்கான சுதந்திரம் கிடையாது.

எனவே, இந்த விழாவுக்கு என்ன தேவையோ, எதை பேச வேண்டுமோ அதை மட்டும் பேசுகிறேன். மற்றதை நேரம் வரும் போது பேசுவேன்.'முரசொலி' பத்திரிகையை ஒருவர் வைத்திருந்தால், அவர் தி.மு.க.,காரர் என்பர். ஆனால், துக்ளக் பத்திரிகை வைத்திருப்பவரை அறிவாளி என்பர். கவலைகள் அன்றாடம் வரும்.அதை நிரந்தரமாக்கினால், அவர் நோயாளி; தற்காலிகமாக்கினால் அவர் அறிவாளி. சோ அறிவாளி. தற்போது, சோ போன்ற துணிச்சல் மிக்க, உண்மையை எழுதும் பத்திரிகையாளர்கள் தேவை.காலம் கெட்டு போச்சு, அரசியல் கெட்டு போச்சு, சமுதாயமும் கெட்டு போச்சு.

எனவே, ஊடகங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளன. சில, 'டிவி'க்கள் தங்களுக்கு ஆதரவான கட்சிகள், அமைப்புகளுக்கு சாதகமாக செய்திகளை தரலாம். ஆனால், நடுநிலையான, 'டிவி' சேனல்கள், பத்திரிகைகள், எது உண்மையோ, அதை மட்டுமே சொல்ல வேண்டும். செய்தி என்ற உண்மை பாலில், பொய் என்ற தண்ணீரை கலக்கக்கூடாது. பொய் எப்போதும் நிலைக்காது. இனிமேல் பொய்யை கலந்து செய்தியாக்காதீர். இவ்வாறு, அவர் பேசினார்.

விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன். ரஜினி அரசியலுக்குள் வர முயற்சித்து கொண்டிருக்கிறார். ஒழுக்க நெறிஅச்சமில்லாத, ஒழுக்க நெறியுடன் கூடிய இதழியலை, சோ கொண்டிருந்தார். சோ போன்ற ஒழுக்க நெறி உடைய இதழியல் தேவைப்படுகிறது. விமர்சனம் இன்றி ஜனநாயகம் கிடையாது. ஆனால், நாட்டின் மீது நேர்மறை பற்றுடைய விமர்சனமாக இருக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும், நாட்டுப் பற்று முதலில் இருக்க வேண்டும்.

இரண்டாவது தான் அவர்களின் கட்சி, அமைப்பு இருக்க வேண்டும். அதன்பிறகே, தங்கள் நலன் இருக்க வேண்டும். தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X