சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடத்தப்பட்ட குழந்தை குறித்து தகவல் தர போலீசார் அழைப்பு

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கடத்தப்பட்ட ஏழு மாத குழந்தை குறித்த தகவல் தெரிவிக்க, போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம், அமராவதியைச் சேர்ந்தவர், ஜான் போஸ்லே. இவரது மனைவி ரந்தேஷா போஸ்லே. இவர்களுக்கு, ஜான் என்ற ஏழு மாத ஆண் குழந்தை உள்ளது. இவர்கள், சென்னை, மெரினா கடற்கரையில் தங்கியிருந்து, பலுான் வியாபாரம் செய்து வருகின்றனர். வழக்கம் போல், 12ம் தேதி பலுான் வியாபாரத்தில் இருந்தபோது, அங்கு வந்த, முகவரி தெரியாத ராதா, 23, என்ற பெண், குழந்தையை சின்னத்திரையில் நடிக்க வைப்பதாக கூறி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

அங்கிருந்து குழந்தையை கடத்தி சென்றார். இந்த சம்பவம் குறித்து, குழந்தையின் தாயார் ரந்தேஷா பேஸ்லே கொடுத்த புகாரின் அடிப்படையில், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை வளாக போலீசார், விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கடத்திய பெண் மற்றும் குழந்தை குறித்து தகவல் தெரிந்தால், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சசியிடம், 99401 01363 என்ற எண்ணில் தகவல் அளிக்கலாம் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
15-ஜன-202011:54:54 IST Report Abuse
Muthukrishnan,Ram இது போன்ற தவறுகள் நிறைய நடக்கிறது. இட்டப்படிப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கலாம். வைக்காமல் இருப்பதற்கு காரணம், நிர்வாகம் தவறுக்கு துணைபோகிறதோ?? என்ற ஐயப்பாடு எழாமல் பார்த்துக்கொண்டாள் நல்லது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X