அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் விபர புத்தகம் வௌீயடு

Added : ஜன 14, 2020
Advertisement
 வேளாண் விபர புத்தகம் வௌீயடு

சென்னை : வேளாண் புள்ளி விபர புத்தகத்தின் முதல் பிரதியை, முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார்.

தமிழக அரசு, பல புதிய கொள்கைகளை அறிமுகம் செய்ததோடு, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்காக, பல்வேறு திட்டங்களை, வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. பல்வேறு திட்டங்களை, வெற்றிகரமாக செயல்படுத்த, அடிப்படை புள்ளி விவரங்கள் மிக முக்கியம். அந்த வகையில், அனைத்து அலுவலர்களுக்கும் பயன்படும் வகையில், 2018ல், வேளாண் புள்ளி விபர புத்தகம் தயாரிக்கப்பட்டது. தற்போது, வேளாண் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக, புள்ளி விபரங்கள் மேம்படுத்தப்பட்டு, புதிய தகவல்களுடன், 2019ம் ஆண்டு, வேளாண் புள்ளி விபர புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில், மாவட்ட வாரியாக மழை, பயிர் சாகுபடி பரப்பு, உற்பத்தி, நில பயன்பாட்டு விபரம், மேட்டூர் அணை திறக்கப்பட்ட நாள், டெல்டா மாவட்டங்களின் கிளை வாய்க்கால்கள் போன்ற விபரங்கள் உள்ளன.மேலும், திட்டங்களுக்கான நிதி, பயிர் சாகுபடி அளவு, மத்திய, மாநில அரசால் வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு மற்றும் கொள்முதல் விலை விபரம், புதிய ரகங்கள், உர வினியோகம், வேளாண் துறை கட்டுப்பாட்டில் உள்ள, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள், உழவன் செயலி என, பல்வேறு விபரங்கள் இடம் பெற்றுள்ளன.இப்புத்தகத்தை, நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்டார்.

முதல் பிரதியை, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுபெற்றார். அப்போது, தமிழக அரசுக்கு, ஐந்தாவது முறையாக, மத்திய அரசு வழங்கியுள்ள, 'க்ரிஷி கர்மான்' விருதை, முதல்வரிடம் காண்பித்து, அமைச்சர் துரைக்கண்ணு வாழ்த்து பெற்றார். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில், 10 லட்சம் டன்னை அடைந்ததற்காக, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் ஜெயகுமார், தலைமை செயலர் சண்முகம், வேளாண்மை துறை செயலர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X