சென்னை : வருவாய் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள, பல்வேறு அரசு கட்டடங்களை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம்,'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.
வருவாய் துறை சார்பில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், 14.60 கோடி ரூபாய் மதிப்பில், கூடுதல் கட்டடம் கட்டப் பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆவடி; கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம்; தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், பாபநாசம்; திருநெல்வேலி மாவட்டம், மானுார் ஆகிய இடங்களில், தாலுகா அலுவலக கட்டடங்கள் மற்றும் தாசில்தார் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை சார்பில்,கரூர் அரசுதொழிற் பயிற்சி நிலையத்தில், 82 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டப்பட்டுள்ளது.
மதுரை, அம்பத்துார், திண்டுக்கல், கோவை, அம்பாசமுத்திரம், ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள, அரசு ஐ.டி.ஐ.,க்களுக்கு, 4.62 கோடி ரூபாய் மதிப்பில், புதிய வகுப்பறை மற்றும் பணிமனை கட்டடங்கள் கட்டப்பட்டு உள்ளன.இவற்றை, முதல்வர் இ.பி.எஸ்., நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சரோஜா, உதயகுமார், பெஞ்சமின், பாண்டியராஜன், நிலோபர் கபீல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE