பொது செய்தி

தமிழ்நாடு

3,186 காவலர்களுக்கு 'முதல்வர் பதக்கம்'

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை : பொங்கல் திருநாளையொட்டி, தமிழக காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்கள், 3,186 பேருக்கு, 'பொங்கல் பதக்கம்' வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல் துறை, தீயணைப்பு மற்றும் சிறை துறைகளில் பணியாற்றுவோர், தம் பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், பொங்கல் திருநாளில், முதல்வரின் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.இந்த ஆண்டு, காவல் துறையில், முதல் நிலை காவலர், ஏட்டு, ஹவில்தார் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில், 3,000 பணியாளர்களுக்கு, 'தமிழக முதல்வரின் காவல் பதக்கங்கள்' வழங்க, இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

மேலும், தீயணைப்பு துறையில், முன்னணி தீயணைப்போர், ஓட்டுனர், தீயணைப்போர் நிலைகளில், 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில், முதல்நிலை வார்டன், இரண்டாம் நிலை பெண் வார்டன் நிலைகளில், 60 பேருக்கும், பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.பதக்கம் பெறுவோருக்கு, பிப்., 1 முதல், மாதாந்திர பதக்கப் படியாக, 400 ரூபாய் வழங்கப்படும். தேர்வான அனைவருக்கும், சிறப்பு விழாவில், பதக்கம் மற்றும் முதல்வர் கையழுத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்.

அதேபோல், காவல் வானொலி பிரிவு, நாய் படைப்பிரிவு, புகைப்பட கலைஞர்கள் பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் என, ஒவ்வொரு பிரிவிலும், ஆறு பேருக்கு, முதல்வரின் காவல் தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம் வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X