பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை : தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், 2019ம் ஆண்டிற்கான, தமிழ் வளர்ச்சி விருதுகள் மற்றும் தமிழ் புத்தாண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, சிகாகோ தமிழ் சங்கத்திற்கு, 2019ம் ஆண்டிற்கான, தமிழ்த்தாய் விருது; புலவர் வெற்றியழகனுக்கு, கபிலர் விருது; மகாதேவனுக்கு உவே.சா., விருது; முனைவர் சரஸ்வதி ராமநாதனுக்கு, கம்பர் விருது; சிந்தனை கவிஞர் கவிதாசனுக்கு, 'சொல்லின் செல்வர்' விருது; மரிய ஜோசப் சேவியருக்கு, ஜி.யு.போப் விருது. லியாகத் அலிகானுக்கு, உமறுப்புலவர் விருது; கவிக்கோ திருஞானசம்பந்தத்திற்கு இளங்கோவடிகள் விருது; உமையாள் முத்துவிற்கு, அம்மா இலக்கிய விருது; அசோகா சுப்பிரமணியனுக்கு, சிங்காரவேலர் விருது.

புலவர் முத்து குமாரசுவாமிக்கு, மறைமலையடிகளார் விருது; புலவர் பிரபாகரனுக்கு அயோத்திதாச பண்டிதர் விருது; நாகராஜனுக்கு, 2018ம் ஆண்டிற்கான, முதலமைச்சர் கணினி தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது, முகமது யூசுப், மஸ்தான் அலி, முருகேசன், கடிகாசலம், மரபின் மைந்தன், வத்சலா, முருகுதுரை, மாலன், கிருசாங்கினி, மதிவாணன் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

உலக தமிழ் சங்க விருதுகளாக, மலேஷியாவை சேர்ந்த ராஜேந்திரனுக்கு, இலக்கிய விருது; பிரான்சை சேர்ந்த முத்து கஸ்துாரிபாய்க்கு, இலக்கண விருது; இலங்கையை சேர்ந்த சுபதினி ரமேசுக்கு, மொழியியல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்த்தாய் விருதுக்கு தொடர்ச்சி 17ம் பக்கம்தமிழ் வளர்ச்சி விருதுகள்...3ம் பக்கத் தொடர்ச்சிவிருது தொகையாக, ஐந்து லட்சம் ரூபாய், நினைவு பரிசு, கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மொழிபெயர்ப்பாளர் விருது பெறுவோருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.

உலக தமிழ் சங்க விருதுகளில், இலக்கிய, இலக்கண, மொழியியல் விருதுகள் பெறுவோருக்கு, விருது தொகையாக, லட்சம் ரூபாய், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும். மற்ற விருதுகளை பெறுவோருக்கு, லட்சம் ரூபாய், சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.இவ்வாறு, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X