சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்ட்ரலில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு

Added : ஜன 14, 2020
Advertisement

சென்னை : சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை, திண்டுக்கல்லில் மீட்கப்பட்டது.

அசாம் மாநிலம், கவுஹாத்தி, ராங்கியா மண்டலைச் சேர்ந்த, அசார்அலி என்பவரின் மனைவி மர்சீனா, 25; கட்டட தொழிலாளி. இவர், தன்னுடன் வேலை பார்த்த நண்பர் அமீத் மற்றும், தன் பெண் குழந்தைகள் மகிஷா, 6, ரஷிதா, 2, ஆகியோருடன், சொந்த ஊருக்கு செல்வதற்காக, 12ம் தேதி இரவு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார்.நேற்று முன்தினம் காலையில் புறப்படும் ரயிலில் செல்வதற்காக, 10வது பிளாட்பாரத்தில், குழந்தைகள் மற்றும் நண்பருடன் துாங்கினார்.

அதிகாலை, 4:00 மணிக்கு விழித்த போது, குழந்தை ரஷிதாவை காணவில்லை. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ஆண் ஒருவர் குழந்தையை கடத்திச் செல்வது தெரிந்தது. கடத்தியவரை பிடிக்க, அனைத்து ரயில்வே போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.மும்பையில் இருந்து, நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ், நேற்று முன்தினம் இரவு, திண்டுக்கல் நிலையத்தில் நின்றபோது, பெட்டியில் குழந்தையுடன் இருந்த பயணி மீது, ரயில்வே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

விசாரித்தபோது, அவர், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தீபக் மண்டல், 32, என்பதும், சென்ட்ரலில் இருந்து, குழந்தையை கடத்தி வந்ததும் தெரிந்தது. குழந்தையை மீட்ட போலீசார், தீபக்கை கைது செய்து, நேற்று சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். குழந்தை, தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X