சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி வாலிபர் பலி

Added : ஜன 14, 2020
Advertisement

திருநெல்வேலி : சாலையில் அறுந்து கிடந்த மின் ஒயரில் சிக்கி, வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்தவர், மஞ்சுநாதன், 23. சென்னையில் வேலை பார்த்து வந்தார்.பொங்கலுக்கு ஊருக்கு வந்த அவர், பனை ஓலைகள் வெட்டுவதற்கு நேற்று காலை, ஸ்கூட்டியில் சென்றுள்ளார். தேவர்குளத்தை அடுத்துள்ள கண்ணாடிகுளத்தில், சாலையில் மின்சார ஒயர் அறுந்து கிடந்து உள்ளது. அதில் வாகனம் சிக்கியதில் மின்சாரம் தாக்கி, மஞ்சுநாதன் பலியானார். தேவர்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X