சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

எளிமையான கவிதைகள் அப்பா படைத்தார்!

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 எளிமையான  கவிதைகள் அப்பா படைத்தார்!

குழந்தைகளுக்கான சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ள, 2019ம் ஆண்டிற்கான, 'பால சாகித்ய புரஸ்கார்' எனப்படும், மத்திய அரசின் விருது பெற்றுள்ள தேவி நாச்சியப்பன்: நான், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பனின் மகள். எங்கள் பெற்றோருக்கு, நாங்கள் ஐந்து குழந்தைகள். அப்பா, வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

கூடவே, 'சங்கு, டமாரம், பாலர் மலர்' போன்ற பல குழந்தைகள் பத்திரிகைகளில், கவிதைகள் மற்றும் கதைகள் எழுதினார். அவர் எழுதிய கவிதைகள், கதைகளை, வீட்டில் உள்ள எங்களிடம் படித்து காண்பிப்பார். அதில், எங்களுக்கு புரியாதவை இருந்தால், அதை சொல்லிக் கொடுப்பார். தேவைப்பட்டால், தன் படைப்புகளை திருத்தமும் செய்வார்.எனக்கு, 5 வயது ஆனபோது, சென்னை, ஆழ்வார்பேட்டையில், பெரிய வீடு ஒன்றில் வசித்து வந்தோம். அந்த வீட்டைச் சுற்றி, காடு போல் மரங்கள் வளர்ந்திருக்கும். அப்பா, அங்கு நடைபயிற்சி மேற்கொள்வார். அப்போது, நானும் அவருடன் செல்வேன். ஒரு முறை, 'அப்பா, அந்தப் பக்கம் ஒரே காடு' என்றேன். உடனே அப்பா, 'இந்தப் பக்கம்?' என்றார்.

'இந்தப் பக்கம் வீடு' என்றேன். 'நடுவில்?' என்றார். 'நடுவில் ரோடு' என்றேன். 'ரோட்டில் என்ன செய்யணும்?' என்றார். 'ரோட்டில் ஓடலாம்' என்றேன். 'கவனமாக ஓடு' என்றார் அப்பா.அதையே கவிதை வரிகளாக ஆக்கினேன். 'அந்தப் பக்கம் காடு; இந்தப் பக்கம் வீடு; நடுவில் ரோடு; நன்கு பார்த்து ஓடு' என, பாடியபடியே ஓடினேன். இப்படித் தான், எளிமையான வார்த்தைகளை, அப்பா தன் கவிதைகள், கதைகளில் பயன்படுத்தி, குழந்தைகள் மனதில் இடம் பிடித்தார்.எட்டாம் வகுப்பு நான் படித்தபோது, 'கவிமணி குழந்தைகள் சங்கம்' என்ற அமைப்பை, அப்பா துவக்கினார். அதை நடத்துமாறு, என்னை பணித்தார்.

கவியரங்கம், பட்டிமன்றம், நாடகம், வானொலி நிகழ்ச்சிகள் என, பல நிகழ்ச்சிகளை, அந்த வயதிலேயே மேற்கொண்டேன்.அப்பா இறந்தவுடன், அந்த துயரத்திலிருந்து எங்களால் மீளவே முடியவில்லை. அவர் பிறந்த நாளான, நவ., 7ல், எங்கள் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், குழந்தைகள் இலக்கிய திருவிழா நடத்தி வருகிறோம். அந்த நாளில், அப்பா எழுதிய கவிதைகளை, குழந்தைகள் பாட வேண்டும் என்பதற்காக, இந்த விழாவை நடத்துகிறோம்.
முதுகலை தமிழாசிரியராக பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள நான், குழந்தைகள் படைப்பிற்காக, பல விருதுகளை பெற்றுள்ளேன். குழந்தை இலக்கியப் பாடல்கள் குறித்து ஆராய்ந்து, டாக்டர் பட்டமும் பெற்றுள்ளேன்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N S Sankaran - Chennai,இந்தியா
15-ஜன-202013:30:50 IST Report Abuse
N S Sankaran கண்ணன் இதழில் திரு அழ வள்ளியப்பாவின் கவிதைகளை படித்து வளர்ந்த தலைமுறையை சேர்ந்தவன் நான். இள மனங்களை பண்படுத்திய செம்மல் அவர். அவர் தம் மகளும் கவிதை புனைவார் என்று கேட்டதில் மகிழ்ச்சி. அழ வள்ளியப்பாவின் மொத்த கவிதைகளும் அடங்கிய தொகுப்பு உள்ளதா? எங்கே கிடைக்கும்?
Rate this:
Share this comment
Cancel
maanu - Kuwait,குவைத்
15-ஜன-202010:34:39 IST Report Abuse
maanu குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பன் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் ராயவரம். அங்குள்ள சுப்ரமணியம் பாலிடெக்னிக்கீழ் முதல் செட் மாணவர்களில் நானும் ஒருவன். திரு. வள்ளியப்பன் அவர்களின் வீடு இங்குதான் உள்ளது. பார்த்திருக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X