இந்தியாவில் நடப்பது நல்லதாக தெரியவில்லை; மைக்ரோசாப்ட் அதிகாரி நாதெள்ளா கவலை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் நடப்பது நல்லதாக தெரியவில்லை; மைக்ரோசாப்ட்' அதிகாரி நாதெள்ளா கவலை

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (14)
Share
 இந்தியாவில் நடப்பது நல்லதாக தெரியவில்லை; மைக்ரோசாப்ட்' அதிகாரி நாதெள்ளா கவலை

புதுடில்லி : ''குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில், இந்தியாவில் நடப்பது நல்லதாக தெரியவில்லை,'' என, 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, சத்ய நாதெள்ளா கவலைதெரிவித்துள்ளார்.


பெருமைப்படுகிறேன்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான சத்ய நாதெள்ளா, 52, கூறியதாவது:குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான விஷயத்தில், இந்தியாவில் நடக்கும் விஷயங்கள் கவலை அளிக்கின்றன; இது, நாட்டுக்கு நல்லதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாடுமே, தங்கள் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லையை உறுதி செய்வதுடன், அதற்கேற்ற குடியுரிமை கொள்கையையும் வரையறுக்க வேண்டும். ஜனநாயக நாட்டில், இவையெல்லாம் ஆரோக்கியமான விவாதங்கள் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.

பல தரப்பட்ட கலாசாரமே, இந்தியாவின் பலம். நான், இந்திய பாரம்பரியத்தில் வளர்ந்தவன்; இதற்காக பெருமைப்படுகிறேன். அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த அனுபவமும் எனக்கு உள்ளது. வங்கதேசத்தில் இருந்து அகதியாக இந்தியா வந்தவர், ஒரு செல்வாக்கான நபராக மாற வேண்டும் அல்லது 'இன்போசிஸ்' நிறுவனத்தின் தலைவராக வேண்டும் என்பது தான், என் விருப்பம்.வரவேற்புஇந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்த போது எனக்கு, எந்த மாதிரியான வரவேற்பு கிடைத்த தோ, அதே போன்ற வரவேற்பு, வங்கதேசத்தில் இருந்து இந்தியா வருவோருக்கும் கிடைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடக்கும் போராட்டங்களில், எதிர்க்கட்சியினர் ஒற்றுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். அப்போது தான் போராட்டம் எளிதாக இருக்கும். ஒற்றுமை இல்லாவிட்டாலும், போராட்டத்தை தொடர வேண்டியது அவசியம். அமர்த்தியா சென்பொருளாதார நிபுணர்குடியுரிமை திருத்த சட்டம் குறித்து சத்ய நாதெள்ளா கூறியது, படித்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு சில விஷயங்களை கற்றுத் தர வேண்டியது அவசியம் என்பதை உணர்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி, இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பதற்காக, குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில், சிரியா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமை அளிக்கப்படுமா?மீனாட்சி லேகிஎம்.பி., - பா.ஜ.,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X