காஷ்மீர் பனிச்சரிவில் 9 பேர் பலி

Added : ஜன 14, 2020
Share
Advertisement
ஸ்ரீநகர் : ஜம்மு - -காஷ்மீரில், பனிச்சரிவில் சிக்கிய, நான்கு ராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலியாகினர். ஜம்மு - -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ௩,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கியுள்ளன. ஜம்மு - -காஷ்மீரில், கடந்த சில நாட்களாக, பனிச்சரிவு அதிகரித்து வருகிறது. இங்குள்ள மச்சில் துறையில் ஏற்பட்ட பனிச்சரிவில், ஐந்து ராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டனர்.ராணுவம், உடனடியாக

ஸ்ரீநகர் : ஜம்மு - -காஷ்மீரில், பனிச்சரிவில் சிக்கிய, நான்கு ராணுவ வீரர்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் பலியாகினர்.

ஜம்மு - -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், ௩,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் தேங்கியுள்ளன. ஜம்மு - -காஷ்மீரில், கடந்த சில நாட்களாக, பனிச்சரிவு அதிகரித்து வருகிறது. இங்குள்ள மச்சில் துறையில் ஏற்பட்ட பனிச்சரிவில், ஐந்து ராணுவ வீரர்கள் சிக்கிக்கொண்டனர்.ராணுவம், உடனடியாக மீட்பு பணிகளை துவங்கியது. மூன்று வீரர்கள் இறந்த நிலையில், காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாயமான மற்றொரு வீரரை தேடும் பணி நடக்கிறது.

இதேபோல், கந்தர்பால் மாவட்டத்தின் ககாங்கிர் பகுதியில், ஒரு கிராமத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில், பொதுமக்கள் ஒன்பது பேர் சிக்கினர். அவர்களில் நான்கு பேர் மீட்கப்பட்ட நிலையில், ஐந்து பேர்பலியாகினர்.காஷ்மீரின் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில், எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலியானார்; ஆறு பேர் மீட்கப்பட்டனர். இதற்கிடையே, ஜம்மு - -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், நிலச்சரிவு மற்றும் பனிப்பொழிவு அதிகரித்து உள்ளது.இதனால், ராம்பன் மாவட்ட நெடுஞ்சாலையில், போக்குவரத்து முடங்கியது.

கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக, பஸ்ஸி, டிக்டோல் மற்றும் பாந்தியல் பகுதிகளில், சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜம்முவில் உள்ள நக்ரோடாவிலிருந்து, காஷ்மீருக்கு செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஜம்மு - -ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கித்தவிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X